ஜெனீவா தீர்மானத்தில் திருத்தங்களை செய்து கொள்ள இணங்கியுள்ளதாக தகவல்

Report Print Kamel Kamel in அரசியல்

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் திருத்தங்களை செய்ய இணங்கியுள்ளதாக அவை தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை இலங்கைக்கு சாதகமான முறையில் திருத்தி கொள்ள அரசாங்கம் இணங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொது செயலாளருமான தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் இலங்கையில் போர் குற்ற விசாரணைகளை நடத்துவதற்கு இணங்கவில்லை என லக்ஸ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்ற செயற்பாடுகளின் போது தொழிநுட்ப ரீதியான ஒத்துழைப்பு மட்டும் கோரப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் படைவீரர்களுக்கு எதிராக செயற்பட அனுமதிக்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.