தமிழீழ விடுதலைப் புலிகளால் முடியாததை ஐ.தே.க செய்துள்ளது!

Report Print Jeslin Jeslin in அரசியல்

தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்க முடியாத நாட்டின் பொருளாதாரத்தை இந்த அரசாங்கம் கடந்த நான்கு வருடங்களில் அழித்து விட்டது என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சித் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கே அதிகமான கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

தற்போதைய அரசாங்கம் கடந்த நான்கு வருடங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் எதனையும் செய்யாது 13 ட்ரில்லியன் ரூபா கடன்களை பெற்றுக்கொண்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடனை வங்கி சட்டத்திட்டங்களுக்கு முரணாக வங்கி அதிகாரிகள் விநியோகிக்கின்றனர்.

வங்கிக் கடனை அரசியல் காரணங்களுக்காக விநியோகிக்கும் வங்கி அதிகாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் அமையவுள்ள தங்களது ஆட்சியில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.