நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தனது துணிச்சல்! காரணம் கூறும் பெண் எம்.பி

Report Print V.T.Sahadevarajah in அரசியல்

நானொரு பெண்ணாக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி எனது படிப்பு தான் என்னை இந்த அளவிற்கு துணிச்சலாக செயற்பட வைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

கல்முனை, கிறிஸ்ரா இல்லத்தில் 108ஆவது சர்வதேச மகளிர் தின விழா இன்று இடம்பெற்றுள்ளது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாணத்தினால் தற்போது முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற 3,000 ரூபாய் கொடுப்பனவை 4,000 ரூபாவாக உயர்த்தியுள்ளோம். 2020ஆம் ஆண்டு 6000 ரூபாவாக அதிகரிக்க எண்ணியுள்ளோம்.

மேலும், முன்பள்ளி ஆசிரியர்களுக்காக புதிய காப்புறுதித்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளோம். இதன் ஊடாக சிறந்த முன்பள்ளி கட்டமைப்பு ஒன்றினை உருவாக்க முடியும் என நாம் நம்புகின்றேன்.

சர்வதேச மகளிர் தினத்தினையோட்டி இம்முறை இலங்கையில் 'திறமையான பெண் அழகான உலகை படைக்கின்றாள்' என்ற தொனிப்பொருளில் நிகழ்வு இடம் பெறவுள்ளது.

திறமையான பெண் என்கின்ற போது பெண்களாகிய நாம் அரசியல்வாதியாக உள்வாங்கும் போது எமது திறமைகளை வளர்த்து கொள்வது அவசியமாகும்.

நானொரு பெண்ணாக நாடாளுமன்றத்திற்குள்ளேயும் சரி, வெளியேயும் சரி எனது படிப்புத்தான் என்னை இந்த அளவிற்கு துணிச்சலாக செயற்பட வைத்துள்ளது.

நான் ஒரு சட்டத்தரணி என்றதன் அடிப்படையில் பல சவால்களை மிக தைரியமாக எதிர்கொண்டுள்ளேன். எனவே, உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள நீங்கள் ஊடகங்கள் ஊடாக புத்தகங்கள் ஊடாக, ஏனைய துறைகளில் உங்களுடைய அனுபவங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு என்றால் மட்டுமே பெண் அரசியல்வாதிகளுக்கு உரிய இடம் கிடைக்கும். அப்பொழுதுதான் நாம் அழகான உலகை படைக்க முடியும் எனத் தெரிவித்தார்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்காக நீங்கள் உள்ளூராட்சி மன்றங்களில் குரல் கொடுப்பதை நான் பெருமையாக பார்க்கின்றேன். முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பெண்களாகவே காணப்படுகின்றார்கள்.

பெண்களாகிய நாங்கள் அரசியல் ரீதியில் அவர்களுக்காக குரல்களை எழுப்பி நிவாரணங்களை தேடிக்கொடுப்பது எமது கடமையாகும்.

தற்பொழுது கிழக்கு மாகாணத்தினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற 3000 ரூபாய் கொடுப்பனவை 4000 ரூபாயாக உயர்த்தியுள்ளோம்.

2020ஆம் ஆண்டு 6000 ரூபாவாக அதிகரிக்க எண்ணியுள்ளோம்.

மேலும், முன்பள்ளி ஆசிரியர்களின் நலன்கருதி காப்புறுதி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தள்ளோம். இதன் ஊடாக சிறந்த முன்பள்ளி கட்டமைப்பு ஒன்றினை உருவாக்க முடியும் என நாம் நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

மனித அபிவிருத்தி தாபனத்தில் கடந்த சுனாமியின் பின்னரான செயற்பாடுகளில் பல இலக்குகளை அடைந்திருக்கின்றார்கள் என்பது இந்நிகழ்ச்சி குறிகாட்டியாகவுள்ளது.

மனித அபிவிருத்தி தாபனம் வேள்வி என்ற பெண்கள் அமைப்பை உருவாக்கி அதன் தலைமைத்துவங்களை பெண்களுக்கே வழங்கி பெண்களே நிர்வகித்து செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, தற்பொழுது அப்பெண்களே திட்டம் தீட்டும் இடங்களில் இருந்து கொண்டு பெண்களுக்காக குரல் கொடுப்பது என்பது முக்கிய விடயமாக காணப்படுகின்றது.

என்னால் இயன்ற அளவில் உங்களுடைய அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளிலும் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளேன் என தெரிவித்துள்ளார்.