பெண்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதை எதிர்க்கின்றேன்! ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

வெளிநாடுகளில் தொழில் புரியும் பெண்கள் உழைத்து நாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணத்தின் மூலமே சுகபோகங்களை அனுபவிக்கும் செல்வந்தர்கள் மட்டுமல்லாது, ஆடம்பர வாகனங்களை பயன்படுத்தும் அரசியல்வாதிகள், அரச உயர் அதிகாரிகள் சுகமான வசதிகளை அனுபவித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் சல்காது விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாக தொழில் புரியும் பெண்கள் மூலமே நாட்டுக்கு அதிகளவான அந்திய செலாவணி கிடைக்கின்றது.

எனினும் இந்த பணத்தை அனுப்பி வைக்கும் தாய்மார், சகோதரிகள் பலரின் வாழ்க்கை கதைகள் சோகமானவை.

வெளிநாடுகளுக்கு பெண்களை வீட்டுப் பணிப்பெண் சேவைக்கு அனுப்புவதை நான் தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கின்றேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.