வரவு செலவு திட்டத்தில் பெண்களை பாதுகாக்கும் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை

Report Print Gokulan Gokulan in அரசியல்

பெண்களை பாதுகாக்கும் பெண்களுக்கான நிவாரணங்களை வழங்கும் வரவு செலவு திட்டம் இம்முறை முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பினர் கூறுயபோதும், பெண்களை பாதுகாக்கும் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும், சமூகத்தின் பாதுகாப்பு குறித்தும் பேசும் அரசாங்கம் இலங்கையில் வாழும் திருநங்கைகளின் பாதுகப்பிற்கு எடுத்த நடவடிக்கை என்ன? என்னவென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனை கேட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலையகத்தில் தோட்டத்தொழிலாளர்களில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் பெண்கள். இவர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. தொழிற்சாலைகளில் அதிகமானவர்கள் பெண்கள், இன்று கடன் பெற்றுள்ளவர்களில் அதிமானவர்கள் பெண்கள், கடன் தொல்லைகளில் அதிகமாக பெண்களே உயிரிழந்துள்ளனர்.

இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? வாழ்வாதாரத்தை பாதுகாக்க வரவு செலவு திட்டத்தில் முன்வைத்துள்ள முன்மொழிவுகள் என்ன? எனவும் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.