சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை - அரசாங்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்கு வரவழைக்கும் எந்த இணக்கப்பாடுகளும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை முன்வைக்கும் யோசனை சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கையின் நீதித்துறை கட்டமைப்பு சம்பந்தமாக நம்பிக்கை இருக்கின்றதா எனவும் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அமைச்சர் கிரியெல்ல இவ்வாறு பதிலளித்துள்ளார்,

கடந்த ஒக்டோபர் மாதம் அரசாங்கம் கொள்ளையிடப்பட்டதாகவும், அதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்று தீர்ப்பை பெற்ற போது, நீதிமன்றத்தின் மீது குற்றம் சுமத்தினர்.

சர்வதேசம் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் வாய்ப்புகள் இருந்தன. 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த நிலைமை மாறியது. அரசாங்கம், சர்வதேசத்துடன் நெருக்கமாக செயற்படும். எனினும் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை.

ஜெனிவா யோசனைக்கு தொழிநுட்ப உதவி மட்டுமே சர்வதேசம் வழங்கும். முன்னர் முன்வைத்த யோசனையை திருத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் உட்பட எவரையும் சர்வதேச நீதிபதிகள் முன் நிறுத்த இடமளிக்க போவதில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.