மகிந்த தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்த சுதந்திரக்கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்
134Shares

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிர்க்கட்சி கண்டியில் இன்று நடத்திய பொதுக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில், கண்டி கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கண்டி கூட்டத்தில் தான் உரை நிகழ்த்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க கோரியுள்ளார்.

எனினும் கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு அமைய அந்த கூட்டத்தில் எவரும் கலந்துக்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட எதிர்க்கட்சிகள் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணிக்கு எதிரான கூட்டணியை அமைத்த பின்னர், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.