நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில்: திஸ்ஸ விதாரண

Report Print Steephen Steephen in அரசியல்
21Shares

நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான "பொறுத்தது போதும்" என்ற தலைப்பிலான பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் மூன்று வேளை உணவை உட்கொள்ள முடியாத கஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதால், ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகிறது.

அத்துடன் நிதியமைச்சர் மங்கள சமரவீர மக்களின் வயிற்றில் அடிக்கவே இம்முறை வரவு செலவுத்திட்டத்தை சமர்பித்துள்ளார். 2015 ஆண்டு மக்களை ஏமாற்றியது போல் அரசாங்கம் மக்களை ஏமாற்றவே இந்த வரவு செலவுத்திட்டத்தில் பொய்யான யோசனைகளை முன்வைத்துள்ளது. எனினும் இந்த தடவை மக்கள் ஏமாற மாட்டார்கள்.

அரசாங்கம் ஜனநாயகம் பற்றி பேசுகிறது. மக்களுக்கு தேர்தலை வழங்குவதே ஜனநாயகம். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக தேர்தலை நடத்தாது முன்னோக்கி செல்லவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.

சர்வதேச நாணய நிதியம் வழங்கும் சொச்ச பணத்திற்காக அரசாங்கம் அந்த நிதியத்தின் நிபந்தனைகளை பின்பற்றி வருகிறது. இதனால், நாட்டு மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

ஓய்வூதியம் உட்பட மக்களுக்கு நன்மையளிக்கும் அனைத்தையும் அரசாங்கம் இரத்துச் செய்யப் போகிறது எனவும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.