மகிந்த அணியுடன் கூட்டணியை ஏற்படுத்தும் பேச்சுக்கள் ஸ்தம்பிதம்: சிக்கலில் மைத்திரி

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கூட்டணியை அமைக்கும் பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த சிலரும் பெரும் சிக்கலை எதிர்நோக்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த பசில் ராஜபக்ச உள்ளிட்ட சிலர் ஏற்படுத்தி வரும் தடைகள் காரணமாக சுதந்திரக்கட்சியுடன் கூட்டணியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இந்த நிலையில், இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி ஏற்படுத்துவதற்கு தடையாக இருக்கும் நபர்களுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பை உருவாக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட உள்ளதாக பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்காத கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

அதேவேளை பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் கூட்டணியை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைகள் அண்மையில் நடக்கவில்லை எனவும் எதிர்காலத்தில் நடத்தப்படும் பேச்சுவார்த்தை குறித்தும் அறிவிக்கப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எனினும் பொதுஜன பெரமுன மற்றும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.