நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவதை எதிர்க்கும் முக்கிய அமைச்சர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதற்காக மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு, ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சஜித் பிரேமதாச, நவீன் திஸாநாயக்க மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க உட்பட பல முக்கியஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டின் ஒருமைப்பாட்டினை கருதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட முறையில் மாற்றம் செய்யக் கூடாது என சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோர் கூறியுள்ளனர்.

அத்துடன் தனது கட்சியின் கொள்கையின் அடிப்படையில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவதை தான் எதிர்ப்பதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதனை தவிர சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்றால், அதில் வெற்றி பெறுவது சிரமம் என மேலும் சிலர் கருதுகின்றனர். இதனால், அவர்களும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலைமையில், 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது சிரமமானது என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.