கார்களை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று கூற ரணிலுக்கு உரிமையில்லை - அனுரகுமார திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வயிற்றில் ஈர துணியை கட்டிக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு அழுத்தம் கொடுக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வாகனங்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த தீர்மானிக்க தார்மீக உரிமை உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இருக்கும் சகல அமைச்சர்களுக்கும் அமைச்சு மூலம் கிடைக்கும் வாகனங்கள் 4 கோடியே 40 லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியானவை.

அதிக விலையில் உள்ள வாகனங்களையும் ஆடம்பர வாகனங்களையும் பயன்படுத்தும் அமைச்சர்கள். சிறிய கார்களை கொள்வனவு செய்வதை நிறுத்து என்று மக்களுக்கு கூறும் கதை என்ன.

ஆடம்பர வாகனத்தை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று கூற பிரதமருக்கு எந்த உரிமையும் இல்லை. ரணில் விக்ரமசிங்க இரண்டு கார்களை இறக்குமதி செய்தார்.

சில தினங்கள் பிரதமர் அலரி மாளிகையில் இருந்து உலங்குவானூர்தியிலேயே நாடாளுமன்றத்திற்கு வருகிறார் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.