போதைப் பொருள் பயன்படுத்துவோரால் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத்திட்டம் இது! பிரசன்ன ரணதுங்க கிண்டல்

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் சமர்பித்துள்ள வரவு செலவுத் திட்டம் போதைப் பொருள் பயன்படுத்துவோரால் தயாரிக்கப்பட்ட ஒன்றெனவும் இதில் மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதனால், இந்த வரவு செலவுத் திட்டம் மக்களை ஏமாற்றும் ஒன்றாக இருக்கும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வரவு செலவுத்திட்டம் தற்போதைய அரசாங்கத்தின் இறுதி வரவு செலவுத் திட்டம். அடுத்த வரவு செலவுத்திட்டம் மகிந்த ராஜபக்ச தலைமையிலான எமது அரசாங்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும்.

மக்கள் விடுதலை முன்னணிக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் எமது தரப்பு அதற்கு இணங்காது.

தேர்தல் முறை மாற்றம் மற்றும் மாகாண சபைகள் தொடர்பாக ஆராயாது, தனித்து நிறைவேற்று அதிகாரத்தை மாத்திரம் இரத்துச் செய்ய முடியாது என மகிந்த ராஜபக்ச, மக்கள் விடுதலை முன்னணியிடம் அறிவித்துள்ளார் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.