தனது அரசாங்கத்தின் கீழ் கொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலை ஒரு வருடத்திற்குள் நிர்மாணிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி ஆரம்பித்துள்ள பொறுத்தது போதும் பொதுக் கூட்டங்கள் தொடரின் முதலாவது கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நான் ஆட்சியில் இருந்தால், கண்டிக்கு அதிவேக நெடுஞ்சாலையில் வந்திருப்பேன். நான் ஆட்சியில் இருந்திருந்தால், ஒரு வருடத்தில் நெடுஞ்சாலையை நிர்மாணித்திருப்பேன். 2018 ஆம் ஆண்டு நெடுஞ்சாலையின் நிர்மாணித்து பூர்த்தி செய்யப்படும் எனக் கூறினார்கள். தற்போது 2019 ஆம் ஆண்டு நிறைவு செய்யப்படும் எனக் கூறுகின்றனர்.
இந்த அரசாங்கம் பதவியில் இருக்கும் போது எப்போது நெடுஞ்சாலையில் நிர்மாணித்து முடிவுக்கப்படும் என்று தெரியாது. அடுத்த ஆறு ஏழு மாதங்களுக்கு பின்னர் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒரு வருடத்தில் நெடுஞ்சாலையை நிர்மாணித்து நிறைவு செய்து கண்டி மக்களுக்கு அதனை வழங்குவோம்.
நெடுஞ்சாலையை நிர்மாணிக்க மலைகளை அழிக்கின்றனர். எங்களது ஆட்சியில் இவை எதுவும் நடக்காது. மலைகளும் காடுகளும் எதிர்கால சந்ததியினருக்கு சொந்தமானது. கடந்த நான்கு ஆண்டுகள் அரசாங்கம் என்ன செய்தது. செய்ததாக கூறுவதற்கு எதுவுமில்லை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.