தாமதமாக புரிந்து கொண்ட மைத்திரி! ரணில் சிறிசேன விரிசல் குறித்து மகிந்த தகவல்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பொருத்தமற்றவர்களுடன் கூட்டணியமைத்தமையின் விளைவினை மிக தாமதமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உணர்ந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி ஆரம்பித்துள்ள பொறுத்தது போதும் பொதுக் கூட்டங்கள் தொடரின் முதலாவது கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் வல்லரசாகும் பொருளாதார திட்டங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தின் 51 நாட்கள் தடைகளை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுவது அரசாங்கத்தின் இயலாமை தன்மையினை மூடிமறைப்பதாகும். அவர்கள் தற்போது இயலாமையின் உச்சத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில் பொருத்தமற்றவர்களுடன் கூட்டணியமைத்தமையின் விளைவினை மிக தாமதமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உணர்ந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார் என்றார்.