மேற்குலகிடம் விற்கப்பட்ட நாடு இது! வாசுதேவ நாணயக்கார

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து நாட்டை மீட்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக பொதுஜன பெரமுனவினர் இன்று‘பொருத்தது போதும்’ என்ற தொனிப்பொருளில் கண்டியில் முன்னெடுத்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அழைப்பினை விடுத்தார். இதன்போது பேசிய அவர், வரலாற்று காலங்களில் அரசர்கள் அந்நியர்களுக்கு எதிராக போராடியே தாய் நாட்டை பாதுகாத்தார்கள்.

இக்காலக்கட்டத்தில் மன்னர்கள் எவரும் அந்நியர்களுக்கு விலைபோகவில்லை. ஆனால் தற்போது ஐக்கிய தேசிய கட்சி மேற்குலகத்தவர்களுக்கு முழுமையாக விலை பேசியுள்ளனர்.

எனவே ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்து மீண்டும் நாட்டை மீட்க வேண்டுமாயின் அனைத்து தரப்பினரும் ஒன்றுப்பட வேண்டும் என்றார்.