கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா விடுத்த உத்தரவு

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

கிழக்கு மாகாண உணவு மருந்துகள் பரிசோதகர்கள் கிளை சங்கத்தினருக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு இன்று ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண உணவு, மருந்துகள் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் டி.சிவகுமார் தமையில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது கொடுப்பனவுகளை வழங்குவதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக எட்டு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது.

அவையாவன,

  • இணைந்த போக்குவரத்து கொடுப்பனவினை பதினாறாயிரம் ரூபாய் ஆக உயர்த்துதல்
  • தொடர்பாடல் 4000 வழங்குதல்
  • மேலதிக நேரக்கொடுப்பனவினை குறைந்தது 100 மணித்தியாலங்களுக்கு வழங்குதல்
  • சீருடை பதினையாயிரம் இனை தொடர்ச்சியாக வழங்குதல்
  • கார் கிலேம் இனை பத்தாயிரம் ரூபாவாக அதிகரித்தல்
  • விஷேட தரத்திற்கான ஆளணியை மாவட்டத்திற்கு ஒன்று என்ற விகிதாசாரத்தில் நடைமுறைப்படுத்தல்
  • ஆட்சேர்ப்புத்திட்ட வரைபினை திருத்தியமைத்தல்
  • தரம் 01 உணவு மருந்துப்பரிசோதகருக்கான பதவி உயர்வின் போது வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பினை வழங்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எம்.சீ.அன்சாரிடம் கோரப்பட்ட கோரிக்கைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.