அரசுடன் இணையும் சுதந்திரக் கட்சியின் ஆறு எம்.பிக்கள்! கூட்டு எதிர்க்கட்சி தகவல்

Report Print Steephen Steephen in அரசியல்

வரவு, செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பின் போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைய போவதாக தகவல் கிடைத்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு டொரின்ங்டன் பிரதேசத்தில் உள்ள அம்மையார் ஒருவரின் முயற்சியில் இவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க உள்ளதாக சாட்சியங்கள் கிடைத்துள்ளன.

அரசாங்கத்தின் வரவு, செலவு திட்டத்திற்கு ஆதரவளித்து தமது அரசியல் வாழ்க்கையை அழித்து கொள்ள வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

கொக்கேய்ன் போதைப்பொருளை பயன்படுத்தி போதை உலகில் இருப்பவர்கள் இந்த வரவு, செலவு திட்டத்தை தயாரித்துள்ளதால், இது கொக்கேய்ன் வரவு, செலவுத் திட்டம் எனவும் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.