மன்னார் புதைக்குழி தடயங்கள் மீண்டும் ஆய்வு செய்யப்படவேண்டும்!

Report Print Ajith Ajith in அரசியல்

மன்னார் மனிதப்புதைக்குழி தொடர்பான ஆய்வு மீண்டும் ஒருமுறை செய்யப்படவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் இந்தக் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் விடுத்துள்ளார்.

மன்னார் புதைகுழி தொடர்பான அமெரிக்காவின் அறிக்கையினால் திருப்திப்பட முடியவில்லை.

இது சக்திமிக்க நாடுகளால் உருவாக்கப்பட்ட அறிக்கையாக இருக்கும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தநிலையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்க முடியவில்லை என்றும் சிவமோகன் குறிப்பிட்டார்