முன்னாள் கடற்படை தளபதி கரணாகொட தண்டிக்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா

Report Print Ajith Ajith in அரசியல்

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொட தவறு எதனையும் செய்திருந்தால் அவருடைய விடயத்தில் சட்டம் பிரயோகிக்கப்பட வேண்டும் என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

வசந்த கரணாகொட மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக காணப்பட்டால் அவர் தண்டிக்கப்பட வேண்டும்.

கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி கொலை செய்த விடயத்தில் கரணாகொடயே உத்தரவுகளை வழங்கினார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாம் போர் வீரர்களை காப்பாற்ற வேண்டும். குற்றவாளிகளை காப்பாற்றவேண்டிய அவசியம் இல்லை என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையை பொறுத்தவரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தமது விருப்பத்துக்கு ஏற்ப அமைச்சர்களை தெரிவுசெய்ய அனுமதிக்க வேண்டும்.

இந்த விடயத்தில் சொந்த காழ்ப்புணர்ச்சிகளுக்கு ஜனாதிபதி இடம் தரக்கூடாது என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Latest Offers