அடுத்த சில மாதங்களில் 75 மில்லியன் டொலர் பெறுமதியான முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்க உள்ளதாக ராஜாங்க அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த முதலீடுகள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும். சீமெந்து தொழிற்சாலை உள்ளிட்ட முதலீடுகள் கிடைக்க உள்ளன.
இதனை தவிர மத்தளை விமான நிலையம், உள்ளடக்கிய பிரதேசங்களிலும் முதலீடுகள் செய்யப்பட உள்ளன.
யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் தொழில்நுட்ப அதாவது ஐ.டி. நிறுவனம் ஒன்று இந்தியாவுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட உள்ளது.
நாட்டின் அனைத்து இடங்களிலும் அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்பட உள்ளன எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.