மைத்திரி – மகிந்த தரப்பில் மோதல்!

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை மே தினக் கூட்டத்தை நடத்த கொழும்பு பொரள்ளை கெம்பல் மைதானத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த மைதானத்தையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கோரி இருந்ததுடன் இரண்டு கட்சிகளுக்ளுக்கு இடையில் இது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலில் கோரிக்கை விடுத்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மைதானம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து மே தினக் கூட்டத்தை நடத்தும் என முதலில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

அந்த தகவல் முற்றிலும் பொய்யாது எனவும் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகளுடன் இணைந்து பொதுஜன பெரமுன மே தினக் கூட்டத்தை நடத்தும் என அதன் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Latest Offers