நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க விரும்பும் மகிந்த தரப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்ற விருப்பம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பல உறுப்பினர்களுக்கு இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்

பண்டாரவளையில் இன்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் தொகுதி அமைப்பு கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தனிப்பட்ட அரசியல் இலாப நோக்கம் கருதும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளனர்.

எனினும் அதில் உள்ள அதிகமானவர்கள் நிறைவேற்று அதிகாரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், அதனை ஒழிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளனர் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers