புலம்பெயர்ந்தோரின் விருப்பங்களுக்காக செயற்படும் அரசாங்கம் – மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

வெளிநாடுகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காகவே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே மகிந்த இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கும் விருப்பங்களுக்கும் அமைய செயற்பட்டு வருகிறது. அத்துடன் புலம்பெயர்ந்தோரின் விருப்பங்களுக்கு அமைய செயற்பட்டு வருகிறது.

நாட்டை பாதுகாத்துக்கொடுத்த படையினர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers