ஜனாதிபதியின் விசேட வர்த்தமானியால் ஏற்பட்டுள்ள மாற்றம்

Report Print Steephen Steephen in அரசியல்

இதுவரை அமைச்சுக்களின் கீழ் கொண்டு வரப்படாத சில நிறுவனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அமைச்சுக்களின் கீ்ழ் கொண்டு வந்துள்ளார்.

இதனடிப்படையில், இலங்கை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு, ஜனாதிபதியின் பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதனை தவிர சினிமா மற்றும் தொலைக்காட்சி கிராமம் வீடமைப்பு மற்றும் கலாசார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை டெலிகொம் நிறுவனம் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் தொலைத் தொடர்புகள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.