வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் தாய்மார் பிள்ளைகளை கேட்டு அழுகின்றனர்

Report Print Steephen Steephen in அரசியல்

பெண்கள் தினத்தில் தமது பிள்ளைகளை கேட்டு அழும் தாய்மார் நிலைமை வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் பொதுவானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போரில் சம்பந்தப்படாத லட்சத்திற்கும் அதிகமானவர்கள் குண்டு தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். அவர்களது பிள்ளைகள் அதிகம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

விஹாரமஹாதேவி பூங்காவில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெண்கள் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த சர்வதேச பெண்கள் தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சர்வதேச பெண்கள் தினம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். சர்வதேச ஆண்கள் தினம் என்று ஒன்றில்லை.

வருடத்தின் 365 நாட்களில் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேச பெண்கள் தினமாக அறிவித்தது.

இதற்கு சிறப்பான காரணம் உண்டு. அமெரிக்காவில் ஆடை தைக்கும் தொழிற்சாலையில் பணிப்புரிந்த பெண்கள் மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாகவே சர்வதேச பெண்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இலங்கையில் மட்டுமல்ல உலகில் அனைத்து நாடுகளிலும் பெண்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். வளர்ச்சியடைந்த நாடுகள் எனக் கூறிக்கொள்ளும் நாடுகளிலும் பெண்களுக்கு பிரச்சினைகள் உள்ளன.

ஐக்கிய நாடுகள் அறிக்கையில் இது உறுதியாகியுள்ளது. எமது நாட்டு பெண்கள் பிரச்சினைகளில் கெடுதியான நிலைமையில் உள்ளனர் எனக் கூறினாலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் இலங்கை பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களை விட அதிகமான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

சிறுமி, யுவதிகள், தாய்மார் என அனைவரும் துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.