சம்பந்தனுக்காக செயற்படும் அரசாங்கம்! மகிந்த காட்டம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியின் வரப் பிரசாதங்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்குச் இன்று சென்று வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

இந்த அரசாங்கம் மிக மோசமாக செயப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது தன்னுடைய பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்வதற்காக சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அரசாங்கத்திற்கான ஆதரவினை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை பயன்படுத்துக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இல்லாமல் போய்விடும் என்பதனால் அந்தக் கட்சியின் தலைவர் சம்பந்தனுக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியின் வரப் பிரசாதங்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முழு மூச்சோடு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.

இதேவேளை, தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தையிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.