அமெரிக்காவின் அறிக்கையை ஏற்றுக்கொள்கிறோம்! மனித எலும்புக்கூடுகள் 500 வருடங்கள் பழமை வாய்ந்தவைதான்

Report Print Nivetha in அரசியல்

மன்னார் மனிதப்புதைக்குழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் 500 வருடங்கள் பழமை வாய்ந்தவை என ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

அமெரிக்க நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட காபன் பரிசோதனை அறிக்கைக்கு அமைய மனித புதை குழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் 500 வருடங்கள் பழமை வாய்ந்தவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாகவே நோக்கும்போது நீதிமன்றத்தின் முடிவுகளே இறுதியானவை. ஆகவே அவற்றை ஏற்றுக்கொள்ளுவதாக கூறியுள்ளார்.

இதேவேளை, மன்னார் மனிதப்புதைக்குழி தொடர்பான ஆய்வு மீண்டும் ஒருமுறை செய்யப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.