வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் மாபெரும் வெற்றி பெறுவோம்! பசில் நம்பிக்கை

Report Print Murali Murali in அரசியல்

மகிந்த ராஜபக்ச முன்மொழியும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விடயத்தில் எம்மிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர். எனினும், எங்களுக்குள் எந்த முரண்பாடும் இல்லை.

இந்நிலையில், மகிந்த ராஜபக்ச முன்மொழியும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும்.

“எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவேண்டும். டிசம்பர் 9ஆம் திகதி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் களமிறங்கும் வேட்பாளர் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்பார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மக்களையும் இணைத்துக்கொண்டு அவர்களின் அமோக ஆதரவுடன் தேர்தலை சந்திப்போம்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.