ரணில் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவானார்!

Report Print Murali Murali in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எனினும் தற்போது வேட்பாளரின் பெயரை வெளியிடமுடியாது. ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள கட்சிகள் இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளன.

இந்த தீர்மானத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.