சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து ஐ.நா. கேள்வி!

Report Print Kamel Kamel in அரசியல்

சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் மனிதாபிமான சட்டங்கள் என்பனவற்றை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை எவ்வாறு இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக நியமிக்க முடியும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

2009ம் ஆண்டு இறுதிக் கட்டப் போரின் போது 58ம் படைப் பிரிவிற்கு சவேந்திரா சில்வா தலைமை தாங்கினார் எனவும் அவரது கட்டளைகளின் அடிப்படையில் இயங்கிய படையினருக்கு எதிராக குறறச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மற்றும் இலங்கை குறித்து விசாரணை நடத்தும் மனித உரிமை காரியாலயம் என்பனவும் சவேந்திரா சில்வா குற்றம் இழைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் சவேந்திர சில்வா தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.