அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எல்லோருக்கும் பொதுவான கட்சி

Report Print Gokulan Gokulan in அரசியல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்பது எல்லோருக்கும் பொதுவான கட்சி என பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தெரிவித்துள்ளார்.

மூதூர் பள்ளிக் குடியிருப்பு பகுதியில் இன்று இடம்பெற்ற மத்திய குழு தெரிவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

அபிவிருத்தியிலும் சரி எந்தவிதமான முன்னெடுப்புக்களிலும் சரி தமிழ், முஸ்லிம், சிங்கள இன மத பேதமற்ற சேவைகள் எமது கட்சியினால் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

புதிய வரவு, செலவு திட்டம் ஊடாக பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. தங்களது கிராமத்தில் உள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் முன்வைப்பேன்.

கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்கு மிகவும் பாரிய பங்களிப்புக்களை செய்யவே இவ்வாறான குழுக்கள் உருவாக்கப்படுகின்றன.

கடந்த கால யுத்த சூழ்நிலையின் போது பாதிக்கப்பட்ட கிராமம் மீள கட்டியெழுப்பப்பட வேண்டும். சமூக நலனுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பாடுபடுகிறது.

தேசிய மட்டத்தில் ஜனநாயகத்தை பாதுகாத்த பெருமை இந்த கட்சிக்கே உரித்தானது. கட்சியின் உயிரோட்டம் மக்கள் கைகளிலேயே தங்கியுள்ளது.

இதனால் எதிர்கால திட்டமிடல்களும் கிராமிய அபிவிருத்திகள் ஊடாக வளர்ச்சியடைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.

2019 ம் ஆண்டின் வரவு, செலவு திட்டத்தில் கிண்ணியாவில் கைத்தொழில் பேட்டை வர்த்தக வாணிப கைத்தொழில் அமைச்சின் கீழ் பாரிய வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கவுள்ளது.

இதனால் எமது இளைஞர்கள் பலர் நன்மையடைவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers