ஜனநாயக கூட்டணியுடன் இணையுங்கள்: பிரதமர் அழைப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணையுமாறு அனைத்து இன மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாணந்துறை - தொட்டவத்தை பகுதியில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஆரம்பித்துள்ள போராட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்வோம். நாட்டில் உள்ள சகல இனங்களும் இணைந்து கொள்ள கூடிய காலத்தை உருவாக்குவதே தனது இறுதியான நோக்கம் எனவும் கூறியுள்ளார்.

சிறிகொத்த கிராமத்திற்கு என்ற தலைப்பிலான வேலைத்திட்டத்தின் ஆரம்பமாக இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.