தேர்தலை மையப்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் வேலைத்திட்டங்கள்

Report Print Ajith Ajith in அரசியல்

தேர்தலை மையப்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி கிராம மட்டத்தில் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர் கூட்டம் ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டம் களுத்துறையில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறையில் உள்ள எட்டு தேர்தல் தொகுதிகளை மையப்படுத்தி அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, ரவி கருணாநாயக்க, கபீர் ஹாசிம், நவின் திஸாநாயக்க, லச்மன் கிரியெல்ல, ஜோன் அமரதுங்க, ரஞ்சித் மத்தும பண்டார, தலதா அத்துகோரள ஆகியோரின் தலைமையில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers