சவேந்திர சில்வாவுக்கு எதிரான விசாரணை! மகேஸ் சேனநாயக்கவின் தகவல்

Report Print Gokulan Gokulan in அரசியல்

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக இலங்கை இராணுவம் உள்ளக விசாரணைகளை நடத்தாது என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக இலங்கை இராணுவம் மீது எதற்காக போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்ற காரணத்தை கண்டறிவதற்காக, உண்மையை கண்டறியும் ஆய்வு நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு கடுமையான கவலை வெளியிடப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.