இலங்கையில் தனி நபரின் மீது உள்ள கடன் எவ்வளவு தெரியுமா?

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் தவறியுள்ளதாகவும், தான் உட்பட அரசியலில் இருக்கும் சகலரும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹூங்கம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சுதந்திரத்திற்கு பின் கடந்த 71 ஆண்டுகளாக அரசாங்கங்கள் இருந்த போதிலும் அவற்றினால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை.

இலங்கையின் தனி நபர் கடன் 4 இலட்சத்து 10 ஆயிரத்து 77 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஊழல் மிக்க நாடுகளின் வரிசையில் இலங்கை மிக வேகமாக இணைந்து வருகிறது.

நாடு வங்குரோத்து நிலைமை அடையும் மட்டத்தை நெருங்கி வருகிறது. அரசியல் ஆதாயங்களை கருதாது நாட்டை இந்த நிலைமையில் இருந்து மீட்க வேண்டும் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.