பொதுஜன பெரமுனவின் வேட்பாளரே ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படுவார்: பசில்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்டாயமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரே நிறுத்தப்படுவர் என அந்த கட்சியின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நிறுத்தப்படும் அந்த வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறுவார் எனவும் அவர் டிசம்பர் 9 ஆம் திகதி ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்வார் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை தொகுதியின் பெண்கள் பிரிவின் அதிகார சபைக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பசில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை மகிந்த ராஜபக்ச தெரிவு செய்வார். அவர் யாராக இருந்தாலும் அவரது வெற்றிக்காக பாடுபடுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படா விட்டால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான கூட்டணி உருவாகாது என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் செயற்பட்டுள்ள விதமும் அவர் செய்துள்ள சேவை காரணமாக அவருக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமல் தவிர்க்க பசில் ராஜபக்சவுக்கு எந்த அடிப்படை காரணங்களும் இல்லை எனவும் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers