பெரும் ஆபத்தானது இது: மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள எச்சரிக்கை!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமொன்றை நாட்டில் அவசரகாலச் சட்டம் இருக்கின்ற போதே பயன்படுத்த முடியும். இவ்வாறிருக்கையில், இச்சட்டத்தை சாதாரண சட்ட அந்தஸ்துக்கு மாற்றுவது ஆபத்தானது என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

மாத்தறையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமொன்றை நாட்டில் அவசரகாலச் சட்டம் இருக்கின்ற போதே பயன்படுத்த முடியும். இவ்வாறிருக்கையில், இச்சட்டத்தை சாதாரண சட்ட அந்தஸ்துக்கு மாற்றுவது ஆபத்தானது.

இவ்வாறு மாற்றும் சந்தர்ப்பத்தில், நான் இப்போது கலந்துகொண்டுள்ள இது போன்ற சாதாரண கூட்டமொன்றைக் கூட நடாத்த விடாமல் தடை செய்வதற்கு ஒரு சாதாரண பொலிஸ் அதிகாரிக்கு முடியுமாகின்றது.

இதனால், இச்சட்டத்தை அங்கீகரிப்பதானது ஜனநாயகத்துக்கு எதிரானது என்பது மட்டுமல்ல, அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளுக்கும் ஆபத்தானது. எனவே எந்தவொரு அரசியல் கட்சியும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கக் கூடாது என்றார்.

கடந்த 1979 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினால் மாற்றீடு செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் மகிந்த ராஜபக்ச இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.