மைத்திரியின் நிதி ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது: பொன்சேகா மறுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பொலன்னறுவை மாவட்டத்துக்கு ஜனாதிபதி தனது அமைச்சின் கீழ் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விசனம் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்டத்துக்கு ஜனாதிபதி தனது அமைச்சின் கீழ் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர்,

பொலன்னறுவை மாவட்டத்துக்கு ஜனாதிபதி தனது அமைச்சின் கீழ் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும், கம்பஹா மாவட்டத்துக்கு கடந்த மூன்று வருடங்களில் 10 பில்லியன் ரூபா வழங்கப்படவில்லை. ஜனாதிபதியின் இந்த நிதியொதுக்கீட்டுப் பிரேரணையை அங்கீகரிக்க முடியாது என்றார்.

இதேவேளை, ஐக்கிய தேசிக் கட்சியின் பின்னாசன நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதியொதுக்கீட்டுப் பிரேரணையை தோற்கடிப்பதாக தீர்மானித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.