இலங்கைக்கு உதவ மறுக்கும் சீனா! காரணம் என்ன?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இலங்கை அரசாங்கத்துக்கு, முன்னரைப் போன்று இலகுவாகவும் விரைவாகவும், கடன்களை வழங்குவதற்கு சீனா தயக்கம் காட்டிவருவதாக முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு நேற்றயை தினம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர்,

கடந்தகாலங்களில் சீனா கடன்களை சீனா துரிதமாக வழங்கியது. ஆனால், இப்போது கடன்களை வழங்க தாமதிக்கிறது. மேலதிக நிபந்தனைகளையும் விதிக்கிறது.

இதற்குப் பிரதான காரணம், தற்போதைய அரசாங்கம் சீனாவை விமர்சித்தமை தான். இலங்கையின் கடன் சுமைக்கு சீனா காரணம் அல்ல. சீனாவை விட ஜப்பானிடம் இருந்தே அதிக கடன்களை பெற்றிருக்கிறது இலங்கை என்றார்.