எந்தச் சட்டத்தின்படி மகிந்த மீண்டும் களமிறங்குவார்?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

எந்தச் சட்டத்தை வைத்துக் கொண்டு மீண்டும் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவரவுள்ளதாக கூறுகின்றார்கள் என்று தெரியவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுபவர் யாராக இருந்தாலும் பரவாயில்லை, அவர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

சிலர் மகிந்த ராஜபக்சவையே ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவருவதாக கூறிவருகின்றனர். எந்த சட்டத்தை வைத்து அவர்கள் கூறுகின்றார்களோ தெரியாது. நான் அறிந்து வைத்துள்ள சட்டத்தின் பிரகாரம் மகிந்த ராஜபக்சவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ள மகிந்த ராஜபக்சவையும், மைத்திரிபால சிறிசேனவையும் இணைத்துக் கொண்டு செல்லும் வேலைத்திட்டமொன்றே அவசியமானது என்றார்.

Latest Offers