கூட்டணி அவைதில் குழப்பம்! மோதிக் கொள்ளும் மகிந்த மைத்திரி அணி உறுப்பினர்கள்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தயாசிறி ஜயசேகர என்பவர் பல தடவைகள் கட்சி தாவியவர். பசில் ராஜபக்ஷ கட்சியை கட்டியெழுப்ப முடியும் என்பதை பொதுஜன பெரமுனவின் வளர்ச்சியின் மூலம் நிரூபித்தவர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்ஷா தெரிவித்துள்ளார்.

அம்பிலிப்பிட்டியவில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் பேசிய அவர்,

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்தாலே ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ள முடியும் எனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தே ஜனாதிபதி வேட்பாளர் வர வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்றும் இன்றும் கலந்துகொண்ட நிகழ்வுகளில் பேசிவருகிறார்.

ஆனால், தயாசிறி ஜயசேகர கூறும் கருத்தை ஏற்க முடியாது. பொதுஜன பெரமுனவே மக்களிடம் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சி. தயாசிறி ஜயசேகர என்பவர் பல தடவைகள் கட்சி தாவியவர். பசில் ராஜபக்ஷ கட்சியை கட்டியெழுப்ப முடியும் என்பதை பொதுஜன பெரமுனவின் வளர்ச்சியின் மூலம் நிரூபித்தவர்.

பொதுஜன பெரமுனவிலிருந்தே ஜனாதிபதி வேட்பாளர் வர வேண்டும் என்றார்.

எவ்வாறாயினும் கண்டியில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பொறுத்தது போதும் அரசாங்க எதிர்ப்புக் கூட்டத்தில் ஸ்ரீ ல.சு.க.யின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.

இரு கட்சிகளிடையேயும் கூட்டணி அமைப்பதிலுள்ள இணக்கப்பாடு எட்டப்படாமல் இருப்பதால் கூட்டத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு மைத்திரிபால சிறிசேன அறிவித்ததாக கொழும்பிலிருந்து தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers