தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது எதிர்ப்பினை வெளியிட வேண்டும்

Report Print Sumi in அரசியல்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது எதிர்ப்பினை வெளியிட வேண்டுமென முன்னாள் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

தனது அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கி பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்ற புதிய சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளது.

இந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒத்ததாகவும், அதை விட மிகவும் வலுவானதுமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்க வேண்டும்.

அத்தோடு 2019ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டம் தமிழர்களுக்கு நன்மை பயக்காத விடத்து அதனையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.