ஜனாதிபதியே நாட்டை சீரழித்து கொண்டிருக்கின்றார்: பிரதியமைச்சர்

Report Print Gokulan Gokulan in அரசியல்

எந்த ஜனாதிபதி கையில் அதிகாரத்தை கொடுத்தோமோ அந்த ஜனாதிபதியே நாட்டை சீரழித்து கொண்டிருக்கின்றார் என பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று அவர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

1947ஆம் ஆண்டில் ஆட்சியில் இல்லாத அளவிற்கு ஜனாதிபதியினால் அரசாங்கம் கடந்த 52 நாட்களில் சீரழிந்தது. இதனால் 7600 கோடி ரூபாக்கள் நட்டம் ஏற்பட்டது.

யார் போராட்டத்தில் ஈடுபட்டனர்? பல்கலைகழக மாணவர்களே! ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பல்கலைகழக மாணவர்கள் அதிகளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி எந்தவொரு தீர்வையும் சொல்லவில்லை.

ஏழை எளிய வட்டிக் கடன் திட்டம் 75%, 100% நுண்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு இடதுசாரிகள் தீர்வை சொல்லவில்லை.

இலங்கையின் பொருளாதாரத்தை பற்றி கவலைப்படாதவர்கள் நீளிக்கண்ணீர் வடிக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.