எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கப்போகின்றது! அரியநேத்திரன்

Report Print Jeslin Jeslin in அரசியல்

இலங்கையில் இருக்கக்கூடிய தேசியக் கட்சிகளுக்கு எந்தத் தேர்தலை தாங்கள் முதலில் எதிர்கொள்வதென்ற சங்கடம் இருக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

வார இறுதி தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்திருந்தனர், எனினும் அதில் அவர் தோல்வியடைந்திருந்தார்.

அதன் பின்னர்தான் மகிந்தவை தோல்வியுறச் செய்ய வேண்டும்ட என்ற நோக்குடன் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து அவரை வெற்றிப்பெறச் செய்திருந்தனர்.

எனவே எதிர்வரும் தேர்தலில் யார் ஜனாதிபதி வேட்பாளராகப் போகின்றார் என்பதனை நாங்கள் முதலில் அவதானிக்க வேண்டும்.

இரண்டாவது எந்தக் கட்சி என்று பார்க்க வேண்டும், இதனையெல்லாம் கருத்திற்கொண்டு அவர்களுடன் பேசிய பின்னரே அறிவிக்கப்படும், தற்போது அதனை சரியாகக் கூறமுடியாது என குறிப்பிட்டுள்ளார்.