ஏமாற்றுவதில் யார் வீரன்? போட்டி போடும் மைத்திரி மற்றும் ரணில்

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஏமாற்றுவதில் யார் வீரன் என்ற போட்டியில் ஈடுபட்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வார இறுதி தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில், ஜனாதிபதியும் பிரதமரும் வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் போட்டி போட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியும் பிரதமரும் வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்திகள் நடைபெறுவதாக காட்டிக் கொள்கின்றார்களே தவிர அபிவிருத்தியில் முழுமையான கவனத்தை செலுத்துவதாக நாங்கள் கருதவில்லை.

வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட தேவைகள் தேங்கிக் கிடக்கின்றன.

மூடப்பட்டிருக்கின்ற தொழிற்சாலைகளை திறந்து இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவது தொடர்பாக இந்த அரசாங்கத்திற்கு பயன்படக்கூடிய அபிவிருத்தி பற்றி பேசுகின்றார்களே தவிர மக்களுக்கு தேவையானவை பற்றி பேசுவதாக இல்லை.

அந்த வகையில் ஏமாற்றுவதில் யார் வீரன் என்ற போட்டியில் ஜனாதிபதியும் பிரதமரும் போட்டி போட்டுக் கொண்டிருப்பதாகவே இந்த அபிவிருத்தி என்ற பேச்சை பார்க்க முடிகின்றது என குறிப்பிட்டுள்ளார்.