கூட்டமைப்புடன் ஜே.வி.பி. முக்கிய கலந்துரையாடல்

Report Print Rakesh in அரசியல்

20ஆவது அரசமைப்பு திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் தற்போது கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்திலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ரில்வின் சில்வா மற்றும் கே.டி.லால்காந்த ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

Latest Offers