மைத்திரியும் மகிந்தவும் இறுதி முடிவுக்கு வருவர்! தலை வணங்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசிய சாந்த பண்டார

Report Print Gokulan Gokulan in அரசியல்

நாம் அரசியல் நடத்துவது மக்களுக்காகவும், நாட்டிற்காகவுமே, தீர்மானங்களை மேற்கொள்ளும் போது மக்கள் நலன்கருதி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

மக்கள் யாரை ஜனாதிபதி பதவியில் அமர்த்த நினைக்கின்றார்களோ அவரே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார்.

எங்களுக்குள் மிகப்பெரிய கூட்டணி ஒன்று உருவானதன் பின்னர் நாடு முழுவதும் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

தயாசிறி ஜயசேகர தெரிவித்த கருத்தானது அவரது தனிப்பட்ட கருத்தாகும்.

எவருக்கும் தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட உரிமையுள்ளது. எனினும் தலைவர்களே இறுதித் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்து இறுதி தீர்மானத்தை அறிவித்ததன் பின்னர் அதற்கு அனைவரும் தலைவணங்க வேண்டும்.

அதுவரை தனிப்பட்ட ரீதியில் வெளியிடும் கருத்துக்களை பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை.

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் வேறுவிதமாக சில கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல உறுப்பினர்கள் வேறுவிதமாக பல கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

எனினும், எமது கட்சிகளில் தலைவர்களே தீர்மானங்களை மேற்கொள்கின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதியே இதுவரை பதவி வகித்துள்ளார்.

ஆகவே எதிர்காலத்திலும் சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி ஒருவர் தெரிவாவார். அரசியலில் தலைவர்கள் எடுத்த தீர்மானங்களே இறுதி முடிவாக இருந்துள்ளன. இதுத் தொடர்பில் குழப்பமடையத்தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.