கூட்டத்தின் முடிவில் சம்பந்தன் கொடுத்த வாக்குறுதி!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

மக்கள் விடுதலை முன்னணியினர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் அக்கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பு நிகழ்ந்தது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இதன்போது பேசப்பட்டது. இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய சம்பந்தன்,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்ய மக்கள் விடுதலை முன்னணியினர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய ஆதரவினை வழங்கும்.

அதிகார பகிர்விற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கைகளுக்கு ஜே.வி.பி.யினர் முழுமையான ஆதரவு நல்குவதாக குறிப்பிட்டுள்ளமை திருப்திகரமானது என்றார்.

இச்சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ரில்வின் சில்வா மற்றும் கே.டி.லால்காந்த ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...