மகிந்தவின் எச்சரிக்கையும்! ஒன்றிணைந்து எதிர்க்கும் கட்சிகளும்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பில் பேசிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும,

இந்தச் சட்டத்தின் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான சக்திகளை இல்லாமல் அகற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அனுமதிக்காது.

அரசதரப்பு உறுப்பினர்கள் பலரும், இந்தச் சட்டமூலத்தை விரும்பவில்லை. எனவே, அவர்களின் ஆதரவையும் பெற்று இந்தச் சட்டமூலத்தை தோற்கடிப்போம் என்று குறிப்பிட்டார்.

அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச பேசும் போது, இந்த அரசாங்கமானது நாட்டில் ஆபத்தான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது. பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வருவது ஆபத்தானது.

ஒரு சாதாரண பொதுக் கூட்டத்தை நடத்துவது என்றாலும் இச்சட்டத்தின் மூலமாக அது தடைப்படும். இது ஆபத்தானது. இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதை தடுப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றியை வேண்டும் என்று குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில்,அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை விட ஆபத்தானது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. அதுமாத்திரமின்றி தமிழ் சட்ட நிபுணர்கள் அதே கருத்தையே வெளிப்படுத்தியிருந்தனர்.

இதேவேளை, ஜேவிபியும், இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கும், என்று ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நீண்ட காலத்துக்குப் பின்னர் ஒரு சட்டத்தை எதிர்ப்பதாக பெரும்பான்மையான கட்சிகள் ஒன்றிணைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.