மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையின் மீது எச்சரிக்கை! நிலைப்பாட்டில் மாற்றமில்லை

Report Print Murali Murali in அரசியல்

உள்நாட்டு விவகாரத்தை சுயமாகவே தீர்த்துக்கொள்வது என்ற இலங்கையின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று அரசாங்க உயர் மட்ட வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்ட தொடர் இடம்பெற்று வரும் நிலையில், மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கையை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜெனிவா நோக்கி சென்றுள்ள குழு தமது இந்த உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜெனிவா சென்றுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றிடம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம், நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் விவகாரமாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ள கருத்துகள் வழமையானவை என்றும் அதுபற்றித் தமது நிலைப்பாட்டை எதிர்வரும் 22ஆம் 23ஆம் திகதிகளில் நடைபெறும் அமர்வுகளில் விளக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தாம் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாகச் சென்றாலும், உண்மையில் இலங்கை அரசின் பிரதிநிதிகளாகவே அங்கு விடயங்களை எடுத்துரைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில், எந்தவிதமான அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டாம் என்று கோரவுள்ளது.

இலங்கையின் உள் விவகாரத்தை சுயமாகவே தீர்த்துக்கொள்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கோரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளும் நிலைப்பாட்டில் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers